Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 287)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

ஐகதீச பவத்பரா ததாநீம் கமநீயா கமலா பபூவ தேவீ அமலாமவலோக்ய யாம் விலோல: ஸகலோSபி ஸ்ப்ருஹயாம் பபூவ லோக: ஐகதீச பவத்பரா ததாநீம் கமநீயா கமலா பபூவ தேவீ அமலாம் அவலோக்ய யாம் விலோல: ஸகல: அபி ஸ்ப்ருஹயாம் பபூவ லோக: जगदीश भवत्परा तदानीं कमनीया कमला बभूव देवी । अमलामवलोक्य यां विलोकः सकलोऽपि स्पृहयाम्बभूव लोकः

அனைத்து உலகிற்கும் தலைவனே! குருவாயூரப்பா! அடுத்து, மனம் வருந்திக் கொண்டிருந்த அனைத்து உலகங்களும் விரும்பும் வண்ணம், களங்கம் சிறிதும் இல்லாதவளான மஹாலக்ஷ்மி தோன்றினாள். மிகவும் அழகுடனும், உன்னிடமே தனது மனதை வைத்தவளுமான மஹாலக்ஷ்மி தோன்றினாள்.