Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 286)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

விமதத்ஸு ஸுராஸுரேஷு ஜாதா ஸுரபிஸ்தாம் ருஷிஷு ந்யதா: த்ரிதாமந் ஹயரத்நமபூததேபரத்நம் த்யுதருச்சாப்ஸரஸ: ஸுரேஷு தாநி விமதத்ஸு ஸுர அஸுரேஷு ஜாதா ஸுரபி: தாம் ருஷிஷு ந்யதா: த்ரிதாமந் ஹய ரத்நம் அபூத் அத இப ரத்நம் த்யு தரு: ச அப்ஸரஸ: ஸுரேஷு தாநி विमथत्सु सुरासुरेषु जाता सुरभिस्तामृषिषु न्यधास्त्रिधामन् । हयरत्नमभूदथेभरत्नं द्यूतरुश्चाप्सरसः सुरेषु तानि

குருவாயூரப்பா! நான்முகன், சிவன், மஹாவிஷ்ணு ஆகிய மூவருமாக (அவர்களுடைய அந்தர்யாமியாக) உள்ளவனே! திருப்பாற்கடலை மேலும் நீ கடைந்தபோது, அதிலிருந்து காமதேனு என்ற பசு தோன்றியது. அதனை நீ முனிவர்களிடம் அளித்தாய். பின்னர் மிகவும் சிறந்த குதிரையான உச்சைஸ்ரவானி தோன்றியது. அடுத்த சிறந்த யானையான ஐராவதம் தோன்றியது. தொடர்ந்து கற்பக விருட்சமும், தேவலோக அப்சரஸ்களும் தோன்றின. இவற்றை நீ தேவர்களுக்குக் கொடுத்தாய்.