Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 285)
Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்
கரலம் தரலாநலம் புரஸ்தாத் ஜலதேருத்விஜகால காலகூடம் அமரஸ்துதிவாத மோத நிக்நோ கிரிசஸ்தந்நிபபௌ பவத் ப்ரியார்த்தம் கரலம் தரல அநலம் புரஸ்தாத் ஜலதே: உத்விஜகால காலகூடம் அமர ஸ்துதிவாத் மோதநிக்ந: கிரிச: தத் நிபபௌ பவத் ப்ரியார்த்தம் गरळं तरळानलं पुरस्ता – ज्जलधेरुद्विजगाल काळकूटम् । अमरस्तुतिवादमोदनिघ्नो गिरिशस्तन्निपपौ भवत्प्रियार्थम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது அந்தக் கடலில் இருந்து பெரிதாக எரிகின்ற நெருப்புடன் கூடிய காலகூடம் என்று அழைக்கப்படும் விஷம் வெளி வந்தது. இதனை நீக்குமாறு அனைவரும் சிவனை வேண்டினர். அவரும் அவர்கள் துதிகளில் மகிழ்ந்து, உன்னுடைய மகிழ்வுக்காக அந்த விஷத்தை முழுவதுமாக உட்கொண்டார் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் viii-7-18 முதல் viii-8-35 முடிய உள்ள ச்லோகங்கள் இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.