Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 284)
Dasaka 27 - கூர்ம அவதாரம்
உத்ப்ராம்யத் பஹு திமி நக்ர சக்ரவாலே தத்ராப்தௌ சிரமதிதேSபி நிர்விகாரே ஏகஸ்த்வம் கரயுக க்ருஷ்ட ஸர்ப்பராஜ: ஸம்ராஜந் பவநபுரேச பாஹி ரோகாத் உத்ப்ராம்யத் பஹு திமி நக்ர சக்ரவாலே தத்ர அப்தௌ சிர மதிதே அபி நிர்விகாரே ஏக: த்வம் கர யுக க்ருஷ்ட ஸர்ப்பராஜ: ஸம்ராஜந் பவநபுரேச பாஹி ரோகாத் उद्भ्राम्यद्बहुतिमिनक्रचक्रवाळे तत्राब्धौ चिरमथितेऽपि निर्विकारे । एकस्त्वं करयुगकृष्टसर्पराजः संराजन् पवनपुरेश पाहि रोगात्
குருவாயூரின் ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கடலில் உள்ள திமிங்கலம், முதலை போன்றவை மிரண்டு ஓடுகின்றபடி வெகு நாட்களாகக் கடலைக் கடைந்த பின்னரும் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை. அதனால் நீ மட்டும் உனது இரு கைகளால் பாம்பை இழுத்துக் கடலைக் கடையத் தொடங்கினாய். என்னை வ்யாதிகளில் இருந்து காப்பாற்றுவாய்.***