Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 283)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

தைத்யௌகே புஜகமுகாநிலேந தப்தே தேநைவ த்ரிதசகுலேSபி கிஞ்சிதார்த்தே காருண்யாத் தவ கில தேவ வாரிவாஹா: ப்ராவர்ஷந்நமரகணாந்ந தைத்ய ஸங்காந் தைத்யௌகே புஜக முக ஆநிலேந தப்தே தேந ஏவ த்ரிதசகுலே அபி கிஞ்சித் ஆர்த்தே காருண்யாத் தவ கில தேவ வாரிவாஹா: ப்ராவர்ஷந் அமரகணாந் ந தைத்ய ஸங்காந் दैत्यौधे भुजगमुखानिलेन तप्ते तेनैव त्रिदशकुलेऽपि किञ्चिदार्ते । कारुण्यात्तव किल देव वारिवाहाः प्रावर्षन्नमरगणान्न दैत्यसंघान्

தேவர்களின் தேவனே! குருவாயூரப்பா! வாசுகி என்ற நாகத்தின் வாயில் இருந்து தோன்றிய விஷக் காற்றினால் அஸுரர் கூட்டம் தடுமாறியது. அப்போது வால்புறம் இருந்த தேவர்களும் சிறிது வேதனை அடைந்தனர். அந்த நேரம் உன்னுடைய கருணையால் தேவர்கள் மீது மழை பொழிந்தது. அந்த மழை அஸுரர்கள் மீது பெய்யவில்லை.