Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 282)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

உத்தாம ப்ரமண ஜவோந்நமத் கிரீந்த்ர ந்யஸ்தைக ஸ்திரதர ஹஸ்தபங்கஜம் த்வாம் அப்ராந்தே விதிகிரிசாதய: ப்ரமோதாத் உத்ப்ராந்தா நுநுவுருபாத்த புஷ்பவர்ஷா: உத்தாம ப்ரமண ஜவ உந்நமத் கிரீந்த்ர ந்யஸ்த ஏக ஸ்திரதர ஹஸ்த பங்கஜம் த்வாம் அப்ராந்தே விதி கிரிச ஆதய: ப்ரமோதாத் உத்ப்ராந்தா நுநுவு: உபாத்த புஷ்ப வர்ஷா: उद्दामभ्रमणजवोन्नमद्गिरीन्द्र – न्यस्तैकस्थिरतरहस्तपङ्कजं त्वाम् । अभ्रान्ते विधिगिरिशादयः प्रमोदा – दुद्भ्रान्ता नुनुवुरुपात्तपुष्पवर्षाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகவும் வேகமாகக் கடையப்பட்டதால் மந்த்ர மலையானது மேல் நோக்கி எழும்பியது. அதன் மீது (அது மேலே எழும்பாமல்) உனது தாமரை மலர் போன்ற அழகான மென்மையான திருக்கரங்களை நீ வைத்தாய். இப்படித் தோன்றும் உன்னைக் கண்டு அதிக மகிழ்வுடன் ஆகாயத்தில் இருந்த நான்முகன், சிவன் போன்றோர் மலர்களைத் தூவினர்.