Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 281)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

உந்மக்நே ஜடிதி ததா தராதரேந்த்ரே நிர்மேதுர்த்ருடமிஹ ஸம்மதேந ஸர்வே ஆவிச்ய த்விதய கணேSபி ஸர்ப்பராஜே வைவச்யம் பரிசமயந்நவீவ்ருதஸ்தாந் உந்மக்நே ஜடிதி ததா தராதரேந்த்ரே நிர்மேது: த்ருடம் இஹ ஸம்மதேந ஸர்வே ஆவிச்ய த்விதய கணே அபி ஸர்ப்பராஜே வைவச்யம் பரிசமயந் அவீவ்ருத: தாந் उन्मग्ने झटिति तदा धराधरेन्द्रे निर्मेथुर्दृढमिह सम्मदेन सर्वे । आविश्य द्वितयगणेऽपि सर्पराजे वैवश्यं परिशमयन्नवीवृधस्तान्

குருவாயூரப்பா! இப்படியாக உன்னால் மேலே கொண்டு வரப்பட்ட மலை நீரின் மேல் தோன்றியவுடன் அனைவரும் மிகவும் உற்சாகம் கொண்டு மீண்டும் கடலைக் கடையத் தொடங்கினர். அப்போது தேவர்கள், அஸுரர்கள் மற்றும் வாசுகி ஆகியவர்களுக்குள் நீ புகுந்து, அவர்கள் சோர்வை நீக்கினாய். மேலும் அவர்களுக்கு சக்தியையும் அளித்தாய்.