Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 280)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

வஜ்ராதி ஸ்திரதர கர்ப்பரேண விஷ்ணோ விஸ்தராத் பரிகத லக்ஷயோ ஜநேந அம்பாதே: குஹரகதேந வர்ஷ்மணா த்வம் நிமக்நம் க்ஷிதிதர நாதமுந்நிநேத வஜ்ர ஆதி ஸ்திரதர கர்ப்பரேண விஷ்ணோ விஸ்தராத் பரிகத லக்ஷயோ ஜநேந அம்பாதே: குஹர கதேந வர்ஷ்மணா த்வம் நிமக்நம் க்ஷிதிதரநாதம் உந்நிநேத वज्रातिस्थिरतरकर्परेण विष्णो विस्तारात्परिगतलक्षयोजनेन । अम्भोधेः कुहरगतेन वर्ष्मणा त्वं निर्मग्नं क्षितिधरनाथमुन्निनेथ

குருவாயூரப்பா! மஹாவிஷ்ணுவே! இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட மிகவும் கடினமான முதுகு ஓட்டைக் கொண்டிருந்தாய். உனது உருவம் லக்ஷம் யோஜனை தூரம் வெகுவாகப் பரந்திருந்தது. இப்படிப்பட்ட உருவம் உடைய நீ கடலின் ஆழம் வரை சென்று அங்கு நீரில் மூழ்கியிருந்த மலையை உனது உடலால் மேலே கொண்டு வந்தாய் அல்லவா?