Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 279)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

க்ஷுப்தாத்ரௌ க்ஷுபித ஜலோதர ததாநீம் துக்தாப்தௌ குருதர பாரதோ நிமக்நே தேவேஷு வ்யதித தமேஷு தத்ப்ரியைஷீ ப்ராணைஷீ: கமடதநும் கடோர ப்ருஷ்டாம் க்ஷுப்த ஆத்ரௌ க்ஷுபித ஜல உதர ததாநீம் துக்த ஆப்தௌ குருதர பாரத: நிமக்நே தேவேஷு வ்யதித தமேஷு தத் ப்ரியைஷீ ப்ராணைஷீ: கமட தநும் கடோர ப்ருஷ்டாம் क्षुब्धाद्रौ क्षुभितजलोदरे तदानीं दुग्धाब्धौ गुरुतरभारतो निमग्ने । देवेषु व्यथिततमेषु तत्प्रियैषी प्राणैषीः कमठतनुं कठोरपृष्ठाम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக சுழன்று கொண்டிருந்த மலையானது, கடைவதால் கலங்கி நிற்கும் நீரை உடைய பாற்கடலில், தனது பாரம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. இதனால் தேவர்கள் மிகவும் மன வருத்தம் கொண்டனர். அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நீ, கடினமான முதுகை உடைய ஆமையாக உருவம் எடுத்தாய்.