Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 277)
Dasaka 27 - கூர்ம அவதாரம்
ஸந்தாநம் க்ருதவதி தாநவை: ஸுரௌகே மந்தாநம் நயதி மதேந மந்தராத்ரிம் ப்ரஷ்டேSஸ்மிந் பதரமிவோத்வஹந் ககேந்த்ரே ஸத்யஸ்த்வம் விநிஹிதவாந் பய: பயாதௌ ஸந்தாநம் க்ருதவதி தாநவை: ஸுரௌகே மந்தாநம் நயதி மதேந மந்தர ஆத்ரிம் ப்ரஷ்டே அஸ்மிந் பதரம் இவ உத்வஹந் ககேந்த்ரே ஸத்ய: த்வம் விநிஹிதவாந் பய: பயாதௌ सन्धानं कृतवति दानवैः सुरौधे मन्थानं नयति मदेन मन्दराद्रिम् । भ्रष्टेऽस्मिन् बदरमिवोद्वहन् खगेन्द्रे सद्यस्त्वं विनिहितवान् पयःपयोधौ
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்கள் அனைவரும் அஸுரர்களிடம் சமாதானம் செய்து கொண்டனர். அந்த கர்வத்துடன், கடைவதற்கு உரிய மத்தாகிய மந்த்ரமலையைத் தூக்கி வரும்போது, பாரம் தாங்காமல் கீழே நழுவ விட்டனர். உடனே நீ உனது கருடன் மீது அமர்ந்து கொண்டு அந்த மலையை ஓர் இலந்தைக் கொட்டை போன்று எளிதாகக் கொண்டு வந்து கடலில் வைத்தாய் அல்லவா?
ஸ்ரீமத்பாகவதத்தின் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 6 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டது.