Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 276)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

ப்ரஹ்மாத்யை: ஸதுதமஹிமா சிரம் ததாநீம் ப்ராதுஷ்யன் வரத புர: பரேண தாம்நா ஹே தேவா திதிஜ குலைர்விதாய ஸந்திம் பியூஷம் பரிமததேதி பர்யசாஸ்த்வம் ப்ரஹ்மா ஆத்யை: ஸதுத மஹிமா சிரம் ததாநீம் ப்ராதுஷ்யன் வரத புர: பரேண தாம்நா ஹே தேவா திதிஜ குலை: விதாய ஸந்திம் பியூஷம் பரிமதத இதி பர்யசா: த்வம் ब्रह्माद्यैः स्तुतमहिमा चिरं तदानीं प्रादुष्षन् वरद ! पुरः परेण धाम्ना । हे देवा दितिजकुलैर्विधाय सन्धिं पीयूषं परिमथतेति पर्यशास्त्वम्

வரம் அளிப்பவனே! குருவாயூரப்பா! நான்முகன் முதலான தேவர்கள் உன்னைக் குறித்த ஸ்தோத்ரங்களை பல காலம் சொல்லி வந்தபோது, பெருமை கொண்ட நீ அப்போது அங்கு தோன்றினாய். நீ தேவர்களிடம், “தேவர்களே! அஸுரர் கூட்டத்தையும் உங்களுடன் இணைத்துக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடையுங்கள்”, என்றாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் viii-5-26 முதல் 50, viii-6-8 முதல் 15.