Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 275)
Dasaka 27 - கூர்ம அவதாரம்
சாபேந ப்ரதித ஜரேSத நிர்ஜரேந்த்ரே தேவேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபேஷு சர்வாத்யா: கமலஜமேத்ய ஸர்வ தேவா நிர்வாண ப்ரபவ ஸமம் பவந்தமாபு: சாபேந ப்ரதித ஜரே அத நிர்ஜர இந்த்ரே தேவேஷு அபி அஸுர ஜிதேஷு நிஷ்ப்ரபேஷு சர்வ ஆத்யா: கமலஜம் ஏத்ய ஸர்வ தேவா நிர்வாண ப்ரபவ ஸமம் பவந்தம் ஆபு: शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु । शर्वाद्याः कमलजमेत्य सर्वदेवा निर्वाणप्रभव समं भवन्तमापुः
மோக்ஷத்தை அளிப்பவனே (நிர்வாண ப்ரபவ)! குருவாயூரப்பா! துர்வாசரின் சாபம் காரணமாக, தேவர்களின் அதிபதியான இந்திரன் தனது சக்தி குறைந்தவனாகவும், மூப்பு அடைந்தவனாகவும் மாறினான். தேவர்கள் அனைவரும் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு, ஒளி இழந்தனர். சிவன் முதலான அனைவரும் தாமரையில் இருந்து தோன்றிய நான்முகனைக் கண்டபின், அவனுடன் இணைந்து உன்னைக் காண வந்தனர் அல்லவா?
ஸ்ரீமத்பாகவதத்தின் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 5 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டது.