Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 274)

Dasaka 27 - கூர்ம அவதாரம்

துர்வாஸாஸ்ஸுர வநிதாப்த திவ்யமால்யம் சக்ராய ஸ்வயமுபதாய தத்ர பூய: நாகேந்த்ர ப்ரதிம்ருதிதே சசாப சக்ரம் கா க்ஷாந்திஸ்த்வதிதர தேவதாம்ச ஜாநாம் துர்வாஸா: ஸுர வநிதா ஆப்த திவ்ய மால்யம் சக்ராய ஸ்வயம் உபதாய தத்ர பூய: நாகேந்த்ர ப்ரதிம்ருதிதே சசாப சக்ரம் கா க்ஷாந்தி: த்வத் இதர தேவதா அம்சஜாநாம் दुर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं शक्राय स्वयमुपदाय तत्र भूयः । नागेन्द्रप्रतिमृदिते शशाय शक्रं का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम्

குருவாயூரப்பா! ஒரு சமயம் துர்வாச முனிவருக்கு தேவலோகப் பெண்ணான ஓர் அப்சரஸ் மூலமாக அம்பாளின் மாலை ஒன்று கிடைத்தது. அதனை அவர் தானாகவே இந்திரனிடம் கொடுத்தார். (அந்த மாலையை அவன் தனது யானையிடம் தந்தான்) அந்த மாலை இந்திரனின் யானையால் மிதிக்கப்பட்டது. அதனைக் கண்ட துர்வாசர் இந்திரனைச் சபித்தார். துர்வாசர் உன்னுடைய அம்சமாகப் பிறக்காமல் மற்ற தெய்வத்தின் அம்சமாக (சிவனின் அம்சமாக) பிறந்ததால் அவருக்குப் பொறுமை எப்படி இருக்கும்?

ஸ்ரீமத்பாகவதத்தின் எட்டாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 5 முதல் 12 முடிய, இந்தத் தசகத்திலும், அடுத்த தசகத்திலும் கூறப்பட்டுள்ளன.