Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 273)

Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்

ஏதத் வ்ருத்தம் த்வாம்ச மாம் ச ப்ரகே யோ காயேத்ஸோSயம் பூயஸே ச்ரேயஸே ஸ்யாத் இத்யுக்த்வைநம் தேந ஸார்த்தம் கதஸ்த்வம் திஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேச ஏதத் வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகே ய: காயேத் ஸ: அயம் பூயஸே ச்ரேயஸே ஸ்யாத் இதி உக்த்வா ஏநம் தேந ஸார்த்தம் கத: த்வம் திஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேச एतद्वृत्तं त्वां च मां च प्रगे यो गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् । इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं धिष्ण्यं विष्णो पाहि वातालयेश !

விஷ்ணுவே! குருவாயூரின் ஈசனே! “இப்படிப்பட்ட இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தையும், என்னையும் யார் ஒருவர் அன்றாடம் காலை வேளையில் கூறுகிறாரோ, அவர் மிகவும் உயர்ந்த நன்மைகளைப் பெறுவார்”, என்று நீ கூறினாய். அத்துடன் அந்த கஜேந்திரனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு நீ ஸ்ரீவைகுண்டம் சென்றாய். என்னைக் காப்பாற்றுவாயாக.***