Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 270)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
ஆர்த்தி வ்யக்த ப்ராக்தன ஜ்ஞாந பக்தி: சுண்டோத்க்ஷிப்தை: புண்டரீகை: ஸமர்ச்சந் பூர்வாப்யஸ்தம் நிர்விசேஷாத்ம நிஷ்ட்டம் ஸ்தோத்ர ச்ரேஷ்டம் ஸோSந்வகாதீத் பராத்மந் ஆர்த்தி வ்யக்த ப்ராக்தந ஜ்ஞாந பக்தி: சுண்ட உத்க்ஷிப்தை: புண்டரீகை: ஸமர்ச்சந் பூர்வ அப்யஸ்தம் நிர்விசேஷாத்ம நிஷ்ட்டம் ஸ்தோத்ரம் ச்ரேஷ்டம் ஸ: அந்வகாதீத் பராத்மந் आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्तिः शुण्डोत्क्षिप्तैः पुण्डरीकैस्समर्चन् । पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं स्तोत्रश्रेष्ठं सोऽन्दगादीत्परात्मन्
பரமாத்மாவே! குருவாயூரப்பா! தனக்கு உண்டான மிகுதியான துன்பத்தின் காரணமாக அந்த கஜேந்திரனுக்குப் பூர்வ ஜென்ம ஞானமும் பக்தியும் பிறந்தன. உடனே தனது துதிக்கையால் எடுக்கப்பட்டத் தாமரை மலர்களைக் கொண்டு உன்னை அர்ச்சனை செய்தான். பின்னர் தான் முற்பிறவியில் கற்றுக் கொண்ட நிர்குண ப்ரஹ்ம ஸ்தோத்திரத்தைக் கூறத் தொடங்கினான்.