Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 269)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
த்வத்ஸேவாயா வைபவாத் துர்நிரோதம் யுத்யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் ப்ராப்தே காலே த்வத் பதைகாக்ர்ய ஸித்த்யை நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யாதாஸ்த்வம் த்வத் ஸேவாயா வைபவாத் துர்நிரோதம் யுத்யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் ப்ராப்தே காலே த்வத் பத ஏகாக்ர்ய ஸித்த்யை நக்ர ஆக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யாதா: த்வம் त्वत्सेवाया वैभवाद्दुर्निरोधं युध्यन्तं तं वत्सराणां सहस्रम् । प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिद्ध्यै नक्राक्रान्तं हस्तिवीरं व्यधास्त्वम्
குருவாயூரப்பா! உன்னுடைய ஆராதனையின் காரணமாக ஆயிரம் ஆண்டு காலம் கஜேந்திரனும், அந்த முதலையும் சண்டை இட்டன. அந்த கஜேந்திரனின் கர்ம காலம் முடியும்வரை, உனது ஸ்ரீவைகுண்ட பதவியை அவனுக்கு அளிப்பதற்காக, அவனை முதலை என்னும் துன்பத்தால் அடக்கினாய் அல்லவா?