Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 268)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
ஹூஹூஸ்தாவத் தேவலஸ்யாபி சாபாத் க்ராஹீ பூதஸ்தஜ்ஜலே வர்த்தமாந: ஜக்ராஹைநம் ஹஸ்திநம் பாததேசே சாந்த்யர்த்தம் ஹி ச்ராந்திதோSஸி ஸ்வகாநாம் ஹூஹூ: தாவத் தேவலஸ்ய அபி சாபாத் க்ராஹீபூத: தஜ்ஜலே வர்த்தமாந: ஜக்ராஹ ஏநம் ஹஸ்திநம் பாததேசே சாந்தி அர்த்தம் ஹி ச்ராந்தித: அஸி ஸ்வகாநாம் हूहूस्तावद्देवलस्यापि शापत् ग्राहीभूतस्तज्जले वर्तमानः । जग्राहैनं हस्तिनं पाददेशे शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम्
குருவாயூரப்பா! அந்தக் குளத்தில் ஹூஹூ என்ற கந்தர்வன், தேவலர் என்ற முனிவரின் சாபத்தால் முதலையாக இருந்தான். அவன் கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டான். உன்னுடைய பக்தர்களை காப்பாற்றவும் அவர்களுக்கு நல்ல ஞானம் ஏற்படவும் அன்றோ நீ அவர்களுக்குத் துன்பத்தை அளிக்கிறாய்?