Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 267)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
ஸ்வேந ஸ்தேம்நா திவ்ய தேசத்வ சக்த்யா ஸோSயம் கேதாநப்ரஜாநந் கதாசித் சைலப்ராந்தே கர்மதாந்த: ஸரஸ்யாம் யூதைஸ்ஸார்த்தம் த்வத்ப்ரணுந்நோSபிரேமே ஸ்வேந ஸ்தேம்நா திவ்ய தேசத்வ சக்த்யா ஸோயம் கேதாந் அப்ரஜாநந் கதாசித் சைல ப்ராந்தே கர்ம தாந்த: ஸரஸ்யாம் யூதை: ஸார்த்தம் த்வத் ப்ரணுந்ந: அபிரேமே स्वेन स्थेम्ना दिव्यदेहत्वशक्त्या सोऽयं खेदानप्रजानन् कदाचित् । शैलप्रान्ते घर्मतान्तः सरस्यां यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे
குருவாயூரப்பா! அந்த கஜேந்திரன் தன்னுடைய உடல் பலத்தாலும், ஒளியுடைய உடலாலும் கிடைத்த அற்புதமான சக்தி காரணமாகத் துன்பம் என்பதே என்ன என்று அறியாதவனாகத் திரிந்தான். ஒருநாள் அந்த மலையில் வெயில் அதிகமாக இருந்தது. இதனால் சோர்வுற்ற யானைக் கூட்டம், உன்னுடைய தூண்டுதலால், அங்கு உள்ள ஒரு குளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கியது.