Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 266)

Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்

துக்தாம்போதேர்மத்யபாஜி த்ரிகூடே க்ரீடஞ்சைலே யூதபோSயம் வசாபி: ஸர்வாந் ஜந்தூநத்யவர்த்திஷ்ட சக்த்யா த்வத் பக்தாநாம் குத்ர ந உத்கர்ஷ லாப: துக்த அம்போதே: மத்ய பாஜி த்ரிகூடே க்ரீடந் சைலே யூதப: அயம் வசாபி: ஸர்வாந் ஜந்தூந் அத்யவர்த்திஷ்ட சக்த்யா த்வத் பக்தாநாம் குத்ர ந உத்கர்ஷ லாப: दुग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे क्रोडञ्छैले यूथपोऽयं वशाभिः । सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பாற்கடலின் நடுவில் உள்ள த்ரிகூடம் என்ற மலையில் உள்ள யானைகளின் கூட்டத்திற்கு அரசனாக இவன் விளங்கினான். அனைத்து மிருகங்களையும் விட இவன் திறன் பெற்றிருந்தான். உன்னையே வணங்கும் பக்தர்களுக்கு எந்த இடத்தில்தான் மேன்மையும் புகழும் கிடைக்காமல் இருக்கும்?