Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 265)

Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்

கும்போத்பூதி: ஸம்ப்ருத க்ரோத பார: ஸ்தப்தாத்மா த்வம் ஹஸ்தி பூயம் பஜேதி சப்த்வாSதைநம் ப்ரத்யகாத் ஸோSபி லேபே ஹஸ்தீந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருதி வ்யக்தி தந்யம் கும்போத்பூதி: ஸம்ப்ருத க்ரோத பார: ஸ்தப்த ஆத்மா த்வம் ஹஸ்திபூயம் பஜேதி சப்த்வா அத ஏநம் ப்ரத்யகாத் ஸ: அபி லேபே ஹஸ்தி இந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருதி வ்யக்தி தந்யம்

குருவாயூரப்பா! இதனைக் கண்ட அகஸ்த்ய முனிவர் மிகவும் கோபம் கொண்டார். இதனால் அவர், “உனது கர்வம் உடைய மனதால் என்னை அலட்சியப்படுத்திய அரசனே! நீ யானையாகப் பிறப்பாய்”, என்று அந்த அரசனைச் சபித்தார். அந்த அரசனும், யானையாகப் பிறந்தான். இருந்தாலும் உன்னையே அவன் த்யானம் செய்த காரணத்தினால் யானைகளில் சிறந்த யானையாக விளங்கினான் அல்லவா?