Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 264)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
இந்த்ரத்யும்ந: பாண்ட்ய கண்டாதிராஜ: த்வத் பக்தாத்மா சந்தநாத்ரௌ கதாசித் த்வத் ஸேவாயாம் மக்நதீராலுலோகே நைவாகஸ்த்யம் ப்ராப்தமாதித்யகாமம் இந்த்ரத்யும்ந: பாண்ட்ய கண்ட ஆதிராஜ: த்வத் பக்தாத்மா சந்தந ஆத்ரௌ கதாசித் த்வத் ஸேவாயாம் மக்ந தீ: ஆலுலோகே ந ஏவ: அகஸ்த்யம் ப்ராப்தம் ஆதித்யகாமம் इन्द्रद्युम्नः पाण्ड्यखण्डाधिराज – स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् । त्वत्सेवायां मग्नधीरालुलोके नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम्
குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் பாண்டிய நாட்டின் அரசனாக இருந்த இந்த்ரத்யும்னன் என்பவன் உன்னிடம் மிகுந்த பக்தி உடையவனாக இருந்தான். உன்னை த்யானிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அப்படி உன்னைத் த்யானித்து அவன் தன்னை மறந்த நிலையில் இருந்தபோது, அவனிடம் விருந்தினராக இருக்க வேண்டும் என்று அங்கு வந்த அகஸ்த்ய முனிவரை அவன் காணவில்லை அல்லவா?
ஸ்ரீமத்பாகவதத்தின் எட்டாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 2 முதல் 4 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.