Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 263)
Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்
ஏவம் நாடித ரௌத்ர சேஷ்டித விபோ ஸ்ரீதாபநீயாபித ச்ருத்யந்த ஸ்புடகீத ஸர்வமஹிமந் அத்யந்த சுத்தாக்ருதே தத்தாத்ருங் நிகிலோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்க்யேத் ப்ரஹ்லாதப்ரியே ஹே மருத்புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம் ஏவம் நாடித ரௌத்ர சேஷ்டித விபோ ஸ்ரீதாபநீய அபித ச்ருதி அந்தஸ்புட கீத ஸர்வ மஹிமந் அத்யந்த சுத்த ஆக்ருதே தத் தாத்ருக் நிகில உத்தரம் புந: அஹோ க: த்வாம் பர: லங்க்யேத் ப்ரஹ்லாதப்ரியே ஹே மருத்புரபதே ஸர்வ ஆமயாத் பாஹி மாம் एवं नाटितरौद्रचेष्टित विभो श्रीतापनीयाभिध - श्रुत्यन्तस्फुटगीतसर्वमहिमन्नत्यन्तशुद्धाकृते । तत्तादृङ्निखिलोत्तरं पुनरहो कस्त्वां परो लंघयेत् प्रह्लादप्रिय हे मरुत्पुरपते सर्वामयात्पाहि माम्
குருவாயூரப்பா! ப்ரஹ்லாதனுக்குப் ப்ரியமானவனே! இப்படியாக பயம் விளைவிக்கும் லீலைகள் புரிந்தவனும், “ந்ருஸிம்ஹ தாபநீயம்” என்ற உபநிஷத்தில் பெருமைகள் நன்றாக விளக்கப்பட்டவனும், தூய்மையான உருவம் உடையவனும், எங்கும் நிறைந்தவனுமாக நீ உள்ளாய். உன்னை உனது பக்தர்களைத் தவிர யார்தான் மீற முடியும்? எனது நோய்களில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.***