Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 262)

Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்

பூயோSப்யக்ஷத ரோஷதாம்நி பவதி ப்ரஹ்மாஜ்ஞயா பாலகே ப்ரஹ்லாதே பதயோர்நமத்யபபயே காருண்ய பாராகுல: சாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்நி ஸமதா: ஸ்தோத்ரைரதோத்காயத: தஸ்யாகாமதியோSபி தேநித வரம் லோகாய சாநுக்ரஹம் பூய: அபி அக்ஷத ரோஷ தாம்நி பவதி ப்ரஹ்மா ஆஜ்ஞயா பாலகே ப்ரஹ்லாதே பதயோ: நமதி அபபயே காருண்ய பார ஆகுல: சாந்த: த்வம் கரம் அஸ்ய மூர்த்நி ஸமதா: ஸ்தோத்ரை: அத உத்காயத: தஸ்ய அகாமம் திய: அபி தேநித வரம் லோகாய ச அநுக்ரஹம் भूयोऽप्यक्षतरोषधाम्नि भवति ब्रह्माज्ञया बालके प्रह्लादे पदयोर्नमत्यपभये कारुण्यभाराकुलः । शान्तस्त्वं करमस्य मूर्ध्नि समधास्तोत्रैरथोद्नायत - स्तस्याकामधियोऽपि तेनिथ वरं लोकाय चानुग्रहम्

குருவாயூரப்பா! அனைவரும் துதித்தும் உன் சீற்றம் தணியவில்லை. கோபத்தின் இடமாகவே நீ விளங்கினாய். அப்போது நான்முகனின் சொல்லைக் கேட்டக் குழந்தையான ப்ரஹ்லாதன், சிறிதும் பயம் இல்லாமல் உனது திருவடிகளை வணங்கினான். நீ உடனே கருணையுடன் கோபம் நீங்கி அவன் தலை மீது உனது திருக்கரத்தை வைத்தாய். உன்னைக் குறித்து பல துதிகளைக் கூறிக் கொண்டும், எதன் மீதும் பற்று இல்லாமல் நின்ற ப்ரஹ்லாதனுக்கு பக்தி வரம் அளித்து, இந்த உலகையும் நீ அநுக்ரஹம் செய்தாய் அல்லவா?