Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 261)

Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்

தாவந்மாம்ஸ வபாகரால வபுஷம் கோராந்த்ர மாலாதரம் த்வாம் மத்யே ஸபமித்தகோபமுஷிதம் துர்வார குர்வாரவம் அப்யேதும் ந சசாக கோபி புவநே தூரே ஸ்திதா பீரவ: ஸர்வே சர்வ விரிஞ்ச வாஸவமுகா: ப்ரத்யேகமஸ்தோஷத தாவத் மாம்ஸ வபா கரால வபுஷம் கோர அந்த்ர மாலா தரம் த்வாம் மத்யே ஸபம் இத்த கோபம் உஷிதம் துர்வார குர்வா ரவம் அப்யேதும் ந சசாக க: அபி புவநே தூரே ஸ்திதா பீரவ: ஸர்வே சர்வ விரிஞ்ச வாஸவமுகா: ப்ரத்யேகம் அஸ்தோஷத तावन् मांसवपाकराळवपुषं घोरान्त्रमालाधरं त्वां मध्येसभमिद्धरोषमुषितं दुर्वारगुर्वारवम् । अभ्येतुं न शशक कोऽपि भुवने दूरे स्थिता भीरवः सर्वे शर्वविरिञ्चवासवमुखाः प्रत्येकमस्तोषत

குவாயூரப்பபா! பின்னர் நீ மாமிஸத்தாலும் இரத்தம் கொழுப்பு ஆகியவற்றாலும் பூசப்பட்ட உடலுடன், ஹிரண்யன் குடலை மாலையாக அணிந்து மிகுந்த கோபத்துடன் அந்த மண்டபத்தின் நடுவில் நின்றாய். யாராலும் உன்னிடம் இருந்து எழுந்த உரத்த ஓசையை தடுக்க இயலவில்லை, உன்னருகில் வரவும் இந்த உலகில் யாருக்கும் துணிவு இல்லை. சிவன், நான்முகன், இந்த்ரன் போன்றவர்கள் கூட உன்னருகில் வர பயந்து கொண்டு தள்ளி நின்று உன்னைத் துதித்தார்கள் அல்லவா?