Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 260)
Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்
த்யக்த்வா தம் ஹதமாசு ரக்த லஹரீஸிக்தோந்நமத் வர்ஷ்மணி ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தைத்ய படலீம் சாகாத்யமாநே த்வயி ப்ராம்யத்பூமி விகம்பிதாம்புதி குலம் வ்யாலோல சைலோத்கரம் ப்ரோத் ஸர்ப்பத்கசரம் சராசரமஹோ து:ஸ்தாமவஸ்தாம் ததௌ த்யக்த்வா தம் ஹதம் ஆசு ரக்த லஹரீ ஸிக்த உந்நமத் வர்ஷ்மணி ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தைத்ய படலீம் ச ஆகாத்யமாநே த்வயி ப்ராம்யத் பூமி விகம்பித அம்புதிகுலம் வ்யாலோல சைல உத்கரம் ப்ரோத் ஸர்ப்பத் கசரம் சராசரம் அஹோ து:ஸ்தாம் அவஸ்தாம் ததௌ त्यक्त्वा तं हतमाशु रक्तलहरीसिक्तोन्नमद्वर्ष्मणि प्रत्युत्पत्य समस्तदैत्यपटलीं चाखाद्यमाने त्वयि । भ्राम्यद्भूमि विकम्पिताम्बुधिकुलं व्यालोलशैलोत्करं प्रोत्सर्पत्खचरं चराचरमहो दुःस्थामवस्थां दधौ
குருவாயூரப்பா! இரத்தக் குளத்தில் நனைந்து விளங்கிய அந்த அஸுரனின் உடலை நீ தூக்கி எறிந்தாய். பின்னர் பாய்ந்து தாவி அங்கு இருந்த அஸுரர்கள் அனைவரையும் நீ கடித்து உண்ணும்போது பூமி தாறுமாறாகச் சுழன்றது; ஸமுத்திரங்கள் கலங்கின; மலைகள் ஆட்டம் கண்டன; நட்சத்திரங்கள் கீழே விழுந்தன. அனைத்தும் தாறுமாறாகப் போகும்படியான நிலை காணப்பட்டது. என்ன வியப்பு!