Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 258)
Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்
நூனம் விஷ்ணுரயம் நிஹந்ம்யமுமிதி ப்ராம்யத் கதாபீஷணம் தைத்யேந்தரம் ஸமுபாத்ரவந்தமத்ருதா தோர்ப்யாம் ப்ருதுப்யாமமும் வீரோ நிர்கலிதோSத கட்க பலகோ க்ருஹ்ணந்விசித்ர ச்ரமாந் வ்யாவ்ருண்வன் புநராபபாத: புவநக்ராஸோத்யதம் த்வாமஹோ நூனம் விஷ்ணு: அயம் நிஹந்மி அமும் இதி ப்ராம்யத் கதா பீஷணம் தைத்யேந்தரம் ஸமுபாத்ரவந்தம் அத்ருதா தோர்ப்யாம் ப்ருதுப்யாம் அமும் வீர: நிர்கலித: அத கட்க பலகோ க்ருஹ்ணந் விசித்ர ச்ரமாந் வ்யாவ்ருண்வந் புந: ஆபபாத: புவந க்ராஸ உத்யதம் த்வாம் அஹோ नूनं विष्णुरयं निहन्म्यमुमिति भ्राम्यद्गदाभीषणं दैत्येन्द्रं समुपाद्रवन्तमधृथा दोर्भ्यां पृथुभ्याममुम् । वीरो निर्गळितोऽथ खड्गफलकौ गृह्णन् विचित्रश्रमान् व्यावृण्वन् पुनरापपात भुवनग्रासोद्यतं त्वामहो
குருவாயூரப்பா! உன்னைக் கண்ட ஹிரண்யன், “இவன் நிச்சயமாக விஷ்ணுதான், இவனைக் கொல்கிறேன் பார்”, என்று கத்தினான். உன்னருகில் ஓடி வந்த அவன் கைகளில், பார்ப்பவரை பயமுறுத்தும் வண்ணம் கதாயுதம் இருந்தது. அவனை நீ உனது பெரிய திருக்கரங்களால் பிடித்தாய். ஆனால் அவன் நழுவிவிட்டான். பின்னர் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றைத் தனது கைகளில் ஏந்தியபடி வித்தியாசமான தாக்குதல்களை வெளிக்காட்டினான். உலகையே உண்டு உமிழ்ந்த உன்னை நோக்கி மறுபடியும் தாக்க ஓடிவந்தான்.