Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 257)

Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்

உத்ஸர்பத்வலிபங்க பீஷணஹநு ஹ்ரஸ்வஸ்தவீயஸ்தர க்ரீவம் பீவரதோச்சதோத்கத நக க்ரூராம்சு தூரோல்பணம் வ்யோமோல்லங்கி கநாகநோபம கனப்ரத்வாந நிர்தாவித ஸ்பர்த்தாலு ப்ரகரம் நமாமி பவதஸ்தந்நாரஸிம்ஹம் வபு: உத்ஸர்பத் வலிபங்க பீஷண ஹநு ஹ்ரஸ்வ ஸ்தவீய: தர க்ரீவம் பீவர தோச்சத உத்கத நக க்ரூராம்சு தூரோல்பணம் வ்யோம உல்லங்கி கநாகந உபம கந ப்ரத்வாந நிர்தாவித ஸ்பர்த்தாலு ப்ரகரம் நமாமி பவத: தத் நாரஸிம்ஹம் வபு: उत्सर्पद्वलिभङ्गभीषुणहनुं ह्रस्वस्थवीयस्तर - ग्रीवं पीवरदोश्शतोद्गतनखकॄरांशुदूरोल्बणम् । व्योमोल्लंघि घनाघनोपमघनप्रध्वाननिर्धावित - स्पर्धालुप्रकरं नमामि भवतस्तन्नारसिंहं वपुः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ கர்ஜனை செய்யும்போது உன் கன்னத்தில் காணப்படும் சதைகளால் மோவாய்க்கட்டை பயங்கரமாக காட்சி தருகிறது. கழுத்து குட்டையாகவும் அகலமாகவும் உள்ளது; உருண்டையாக பருத்த ஆயிரம் கைகளில் இருந்து வெளியில் நீண்ட நகங்கள் பளீரென்று ஒளி வீசி பயங்கரமாக உள்ளன; மழை மேகங்களில் உள்ள கனமான இடி ஓசை போன்று எழும் கர்ஜனை; இதனால் விரட்டப்பட்ட அஸுரர் கூட்டம் - இப்படியாக உள்ள உனது நரஸிம்ஹ உருவத்தை நான் வணங்குகிறேன்.