Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 255)

Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்

தைத்யே திக்ஷு விஸ்ருஷ்ட சக்ஷுக்ஷி மஹா ஸம்ரம்பிணி ஸ்தம்பத: ஸம்பூதம் ந ம்ருகாத்மகம் ந மநுஜாகாராம் வபுஸ்தே விபோ கிம் கிம் பீஷணமேததத்புதமிதி வ்யுத்ப்ராந்த சித்தேSஸுரே விஸ்பூர்ஜ்ஜத் தவலோக்ர ரோம விகஸத் வர்ஷ்மா ஸமாஜ்ரும்பதா: தைத்யே திக்ஷு விஸ்ருஷ்ட சக்ஷுக்ஷி மஹா ஸம்ரம்பிணி ஸ்தம்பத: ஸம்பூதம் ந ம்ருகாத்மகம் ந மநுஜாகாராம் வபு: தே விபோ கிம் கிம் பீஷணம் ஏதத் அத்புதம் இதி வ்யுத்ப்ராந்த சித்தே அஸுரே விஸ்பூர்ஜத் தவல உக்ர ரோம விகஸத் வர்ஷ்மா ஸமாஜ்ரும்பதா: दैत्ये दिक्षु विसृष्टचक्षुषि महासंराम्भिणी स्तम्भतः सम्भूतं न मृगात्मकं न मनुजाकारं वपुस्ते विभो । किं किं भीषणमेतदद्भुतमिति व्युद्भ्रान्तचित्तेऽसुरे विस्फूर्ज्जद्धवलोग्ररोमविकसद्वर्ष्मा समाजृम्भथाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று தனது கண்களை நான்கு திசைகளிலும் சுழற்றிப் பார்த்தான். அப்போது மிருக வடிவமோ மனித வடிவமோ அல்லாத உனது உருவம் அந்தத் தூணில் இருந்த வெளிவந்து. உன்னைக் கண்ட ஹிரண்யன் அச்சத்துடன், “என்ன இது! என்ன இது! பயங்கரமாகவும் வியப்பாகவும் உள்ளதே”, என்று தனது மனம் கலங்கி நின்றான். அடர்த்தியாகவும் வெண்மையாகவும் இருந்த பிடரி முடிகளால் ஒளி வீசும் உடலை உடையவனாக நீ மேலும் மேலும் வளர்ந்தாய் அல்லவா?