Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 254)
Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்
ஸ்தம்பே கட்டயதோ ஹிரண்யகசிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந் ஆகூர்ணஜ்ஜகதண்டகுண்ட குஹரோ கோரஸ்தவாபூத்ரவ: ச்ருத்வா யம் கில தைத்ய ராஜஹ்ருதயே பூர்வம் கதாப்யச்ருதம் கம்ப: கச்சந ஸம்பபாத சலிதோSப்யம்போஜபூர் விஷ்டராத் ஸ்தம்பே கட்டயத ஹிரண்யகசிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந் ஆகூர்ணத் ஜகத் அண்ட குண்ட குஹர: கோர: தவ அபூத் ரவ: ச்ருத்வா யம் கில தைத்யராஜ ஹ்ருதயே பூர்வம் கதாபி அச்ருதம் கம்ப: கச்சந ஸம்பபாத சலித: அபி அம்போஜபூ: விஷ்டராத் स्तम्भे घट्टयतो हिरण्यकशिपोः कर्णौ समाचूर्णय - न्नाधूर्णज्जगदण्डकुण्डकुहरो घोरस्तवाभूद्रवः । श्रुत्वा यं किल दैत्यराजहृदये पूर्वं कदाप्यश्रुतं कम्पः कश्चन सम्पपात चलितोऽप्यम्भोजभूर्विष्टरात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஹிரண்யகசிபு அந்தத் தூணைத் தனது கத்தியால் அடித்தான். உடனே அவன் காதுகளைக் கிழிப்பது போன்றும் அண்டங்கள் அனைத்தும் நடுங்குவது போன்றும் ஒரு பயங்கரமான கர்ஜனை உண்டானது. இதற்கு முன்பு இப்படி ஓர் ஓசையைக் கேட்காத அசுரர் தலைவனான ஹிரண்யனின் மனதில் ஏற்பட்ட நடுக்கத்தைச் சொற்களால் கூற இயலாது. இந்த ஓசையைக் கேட்ட நான்முகன் தனது ஆசனத்திலிருந்து நழுவினார் அல்லவா?