Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 253)
Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்
அரே க்வாஸௌ க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாளோ திதிஸுத: அத: பச்சாத் விஷ்ணோ ந ஹி வதிதுமீசோSஸ்மி ஸஹஸா க்ருபாத்மந் விச்வாத்மந் பவநபுரவாஸிந் ம்ருடய மாம் அரே க்வ அஸௌ க்வ அஸௌ ஸகல ஜகத் ஆத்மா ஹரி: இதி ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாள: திதி ஸுத: அத: பச்சாத் விஷ்ணோ ந ஹி வதிதும் ஈச: அஸ்மி ஸஹஸா க்ருபாத்மந் விச்வாத்மந் பவநபுர வாஸிந் ம்ருடயமாம் अरे क्वासौ क्वासौ सकलजगदात्मा हरिरिति प्रभिन्ते स्म स्तम्भं चलितकरवाळो दितिसुतः । अतः पश्चाद्विष्णो ! न हि वदितुमीशोऽस्मि सहसा कृपात्मन् ! विश्वात्मन् ! पवनपुरवासिन् ! मृडय माम्
கருணை பொங்கும் மனம் உள்ளவனே! உலகின் நாயகனே! குருவாயூரில் உள்ளவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகுந்த கோபம் கொண்ட ஜிரண்யகசிபு, “அடேய் ப்ரஹ்லாதா! அனைத்து உலகிலும் உள்ளவன் அவனே, அவனே ஆத்மா என்று நீ கூறும் அந்த ஹரி எங்கே? எங்கே அவன்?”, என்று உரக்கக் கூவினான். கைகளில் உருவிய கத்தியுடன் அங்கு உள்ள தூண் மீது பலமாக அடித்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைக் கூற எனக்கு சக்தி இல்லை, அச்சமே உள்ளது.***