Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 252)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

பிதா ச்ருண்வந் பால ப்ரகரமகிலம் த்வத் ஸ்துதிபரம் ருஷாந்த: ப்ராஹைநம் குலஹதக கஸ்தே பலமிதி பலம் மே வைகுண்டஸ்தவ ச ஜகதாம் சாபி ஸ பலம் ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீரோSயமகதீத் பிதா ச்ருண்வன் பால ப்ரகரம் அகிலம் த்வத் ஸ்துதி பரம் ருஷாந்த: ப்ராஹ ஏநம் குலஹதக க: தே பலம் இதி பலம் மே வைகுண்ட: தவ ச ஜகதாம் ச அபி ஸ பலம் ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலம் இதி தீர: அயம் அகதீத் पिता श्रुण्न् बालप्रकरमखिलं त्वत्स्तुतिपरं रुषान्धः प्राहैनं कुलहतक कस्ते बलमिति । बलं मे वैकुण्ठस्तव च जगतां चापि स बलं स एव त्रैलोक्यं सकलमिति धीरोऽयमगदीत्

குருவாயூரப்பா! அஸுரர் கூட்டத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் (ப்ரஹ்லாதனால்) உன்னை உபதேசிக்கத் தொடங்கினர் என்பதை ஹிரண்யகசிபு கேள்விப்பட்டான். மிகுந்த கோபத்துடன் அவன் ப்ரஹ்லாதனிடம், “அஸுர குலத்தை அழிப்பவனே! உனக்கு பலமாக உள்ளவன் யார்?”, என்றான். அதற்குப் ப்ரஹ்லாதன் மிகவும் துணிவுடன், “எனக்குப் பலமாக உள்ளவன் ஸ்ரீவைகுண்டநாதனாகிய ஸ்ரீமந்நாராயணன் ஆவான். உனக்குப் பலமாக உள்ளவனும் அவனே, மூன்று உலகிற்கும் அவனே அனைத்தும் ஆவான்”, என்றான் அல்லவா?