Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 250)
Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்
ஸ சூலைராவித்த: ஸுபஹு மதிதோ திக்கஜகணைர் மஹாஸர்பைர்தஷ்டோSப்யநசந கராஹார விதுத: கிரீந்த்ரவக்ஷிப்தோSப்யஹஹ பரமாத்மந்நயி விபோ த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடாமபஜத ஸ சூலை: ஆவித்த: ஸுபஹு மதித: திக்கஜ கணை: மஹா ஸர்பைர் தஷ்ட: அபி அநசந கர ஆஹார விதுத: கிரீந்த்ர அவக்ஷிப்த: அபி அஹஹ பரமாத்மந் அயி விபோ த்வயி ந்யஸ்த ஆத்மத்வாத் கிம் அபி ந நிபீடாம் அபஜத स शूलैराविद्धः सुबहु मथितो दिग्गजगणै - र्महासर्पैर्दष्टोऽप्यनशनगराहारविधुतः । गिरीद्रावक्षिप्तोऽप्यहह ! परमात्मन्नयि विभो ! त्वयि न्यस्तात्मत्वात् किमपि न निपीडामभजत
குருவாயூரப்பா! பரமாத்மாவே! (ப்ரஹ்லாதனுக்கு என்ன நடந்தது?) சூலம் என்னும் ஆயுதத்தால் துன்புறுத்தப்பட்டான்; யானைகளால் மிதிக்கப்பட்டான்; பெரிய நச்சுப் பாம்புகளால் தீண்டப்பட்டான்; நஞ்சு கலந்த உணவு அளிக்கப்பட்டான்; உயரமான மலையில் இருந்து கீழே தள்ளப்பட்டான். இத்தனை துன்பங்கள் இழைக்கப்பட்டவனாக இருப்பினும், உனது திருவடியில் மனதைத் திருப்பியதால் அவன் துன்பமே அடையவில்லை அல்லவா? என்ன ஆச்சர்யம்!