Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 249)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

அதீதேஷு ச்ரேஷ்டம் கிமிதி பரிப்ருஷ்டேSத தநயே பவத் பக்திம் வர்யாமபி கதி பர்யாகுலத்ருதி: குருப்யோ ரோஷித்வா ஸஹஜமதிரஸ்யேத்யபிவிதந் வதோ பாயாநஸ்மிந் வ்யதநுத பவத்பாத சரணே அதீதேஷு ச்ரேஷ்டம் கிம் இதி பரிப்ருஷ்டேத தநயே பவத் பக்திம் வர்யாம் அபிகததி பர்யாகுல த்ருதி: குருப்ய: ரோஷித்வா ஸஹஜ மதி: அஸ்ய இதி அபிவிதந் வதோபாயாந் அஸ்மிந் வ்யதநுத பவத் பாத சரணே अधीतेषु श्रेष्ठं किमिति परिपृष्टेऽथ तनये भवद्भक्तिं वर्यामभिगदति पर्याकुलधृतिः । गुरुभ्यो रोषित्वा सहजमतिरस्योत्यभिविदन् वधिपायानस्मिन् व्यतत्नुत भवत्पादशरणे

குருவாயூரப்பா! ஒருநாள் ஹிரண்யகசிபு, ப்ரஹ்லாதனிடம், “நீ கற்றவற்றுள் சிறந்தது எது?”, என்று வினவினான். அதற்கு ப்ரஹ்லாதன், “பகவானிடம் கொண்ட பக்தியே சிறந்து உள்ளது”, என்றான். இதனால் மனவருத்தம் உண்டான ஹிரண்யன், ஆசான்களிடம் கோபம் கொண்டான். அவர்களிடமிருந்து, ப்ரஹ்லாதனின் இந்தப் பக்தியானது கடந்த ஜென்மம் மூலமாக வந்தது என்று உணர்ந்தான். உன்னைச் சரண் பற்றிய ப்ரஹ்லாதனைக் கொல்லவும் திட்டம் தீட்டினான்.