Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 248)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜஸுதே ஸ த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபிரசிசிக்ஷச்சிரமமும் குரு ப்ரோக்தம் சாஸாவிதமிதமபத்ராய த்ருடமி த்யபாகுர்வந் ஸர்வம் தவ சரண பக்த்யைவ வவ்ருதே ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜஸுதே ஸ த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி: அசிசிக்ஷத் சிரம் அமும் குரு ப்ரோக்தம் ச அஸௌ இதம் இதம் அபத்ராய த்ருடம் இதி அபாகுர்வந் ஸர்வம் தவ சரண பக்த்யா ஏவ வவ்ருதே सुरारीणां हास्यं तव चरणदास्यं निजसुते स दृष्ट्वा दुष्टात्मा गुरुभिरशिशिक्षच्चिरममुम् । गुरुप्रोक्तं चासाविदमिदमभद्राय दृढमि - त्यपाकुर्वन् सर्वं तव चरणभक्त्यैव ववृधे

குருவாயூரப்பா! தீய குணம் படைத்த அந்த ஹிரண்யகசிபு, தேவர்களின் விரோதிகளான அஸுரர்கள் பரிகாசம் செய்யும் உனது திருவடிகளின் மீது தன் மகன் கொண்ட பக்தியைக் கண்டு கோபம் கொண்டான். ப்ரஹ்லாதனின் மனதை மாற்றும் பாடங்களை கற்றுத் தர ஆசான்களுக்கு உத்தரவிட்டான். அத்தகைய ஆசான்கள் உபதேசித்த பாடங்கள் நிரந்தர பயன் அளிக்காதவை என்று முடிவு செய்த ப்ரஹ்லாதன், உனது திருவடியே சிறந்தது என்று தனது பக்தியை மேம்படுத்தினான்.