Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 247)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

ததோSஸ்ய ப்ரஹ்லாத: ஸமஜநி ஸுதோ கர்பவஸதௌ முநேர்வீணாபாணேரதிகத பவத் பக்தி மஹிமா ஸ வை ஜாத்யா தைத்ய: சிசுரபி ஸமேத்ய த்வயி ரதிம் கத: த்வத் பக்தானாம் வரத பரமோதாஹரணதாம் தத: அஸ்ய ப்ரஹ்லாத: ஸமஜநி ஸுதோ கர்பவஸதௌ முநே: வீணா பாணே: அதிகத பவத் பக்தி மஹிமா ஸ வை ஜாத்யா தைத்ய: சிசு: அபி ஸமேத்ய த்வயி ரதிம் கத: த்வத் பக்தானாம் வரத பரம உதாஹரணதாம் ततोऽस्य प्रह्लादस्समजनि सुतो गर्भवसतौ मुनेर्वीणापाणेरधिगतभबद्भक्तिमहिमा । स वै जात्या दैत्यश्शिशुरपि समेत्य त्वयि रतिं गतस्त्वद्भक्तानां वरद परमोदाहरणताम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வரங்கள் அளிப்பவனே! ஹிரண்யகசிபுவுக்கு ப்ரஹ்லாதன் என்னும் மகன் தோன்றினான். இவன் தனது தாயின் கர்ப்பத்தில் உள்ளபோதே உன்னுடைய பெருமைகளை உபதேசமாக அறிந்தான். யார் மூலமாக? வீணையை எப்போதும் கைகளில் உடையவரான நாரதர் மூலமாக ஆகும். அந்தச் சிறுவன் அஸுரப்பிறவி எடுத்திருந்தாலும், உன் மீது மிகுந்த பக்தி உடையவனாக, பக்தர்களுக்கு ஓர் உதாரணமாக இருந்தான்.