Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 246)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

நிஹந்தும் த்வாம் பூயஸ்தவ பதமவாப்தஸ்ய ச ரிபோ பஹிர் த்ருஷ்டேரந்தர்ததித ஹ்ருதயே ஸுக்ஷ்ம வபுஷா நதந்நுச்சைஸ்தத்ராப்யகில புவனாந்தே ச ம்ருகயந் பியா யாதம் மத்வா ஸ கலு ஜிதகாசீ நிவவ்ருதே நிஹந்தும் த்வாம் பூய: தவ பதம் அவாப்தஸ்ய ச ரிபோ: பஹிர் த்ருஷ்டே: அந்தர்ததித ஹ்ருதயே ஸுக்ஷ்ம வபுஷா நதந் உச்சை: தத்ர அபி அகில புவன் அந்தே ச ம்ருகயந் பியா யாதம் மத்வா ஸ கலு ஜிதகாசீ நிவவ்ருதே निहन्तुं त्वां भूयस्तव पदमवाप्तस्य च रिपो - र्बहिर्दृष्टेरन्तर्दधिथ हृदये सूक्ष्मवपुषा । नदन्नुच्चैस्तत्राप्यखिलभुवनान्ते च मृगयन् भिया यातं मत्वा स खलु जितकाशी निववृते

குருவாயூரப்பா! உன்னை அழிப்பதற்காகவே உனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து உன்னைத் தேடினான். அவன் உன்னை வெளியில் தேடியபோது நீ அவனது மனதினுள் ஸூக்ஷ்ம ரூபம் எடுத்து மறைந்தாய். ஸ்ரீவைகுண்டத்தில் மட்டும் அல்லாது அனைத்து உலகங்களிலும் உன்னைத் தேடிய ஹிரண்யகசிபு, உரத்த சத்தத்தில் கர்ஜனை செய்து, நீ பயந்து ஓடிவிட்டாய் என்று முடிவு செய்து தனது இடத்திற்கு மகிழ்வுடன் திரும்பினான்.