Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 245)
Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்
விதாதாரம் கோரம் ஸ கலு தபஸித்வா நசிரத: புர: ஸாக்ஷாத் குர்வந் ஸுரநர ம்ருகாத்யைரநிதநம் வரம் லப்த்வா த்ருப்தோ ஜகதிஹ பவந் நாயகமிதம் பரிக்ஷுந்தந்நிந்த்ராதஹரத திவம் த்வாமகணயந் விதாதாரம் கோரம் ஸ கலு தபஸித்வா ந சிரத: புர: ஸாக்ஷாத் குர்வந் ஸுர நர ம்ருகாத்யை: அநிதநம் வரம் லப்த்வா த்ருப்தோ ஜகத் இஹ பவந் நாயகம் இதம் பரிக்ஷுந்தந் இந்த்ராத் அஹரத் திவம் த்வாம் அகணயந் विधातारं घोरं स खलु तपसित्वा नचिरतः पुरः साक्षात्कुर्वन् सुरनरमृगाद्यैरनिधनम् । वरं लब्ध्वा दृप्तो जगदिह भवन्नायकमिदं परिक्षुन्दन्निन्द्रादहरत दिवं त्वामगणयन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த ஹிரண்யகசிபு என்பவன் தனது கடுமையான தவத்தால் நான்முகனைத் தனக்கு முன்பாகத் தோன்றும்படி செய்தான். அவன் நான்முகனிடமிருந்து தனக்கு தேவர்கள், மனிதர்கள், மற்றும் விலங்குகளால் மரணம் உண்டாகக்கூடாது என்று வரம் பெற்றான். இதனால் மிகுதியான கர்வம் அடைந்த அவன், உன்னை மதிக்காமல், உன்னை மதிக்கும் இந்த உலகத்தை துன்புறுத்தினான். மேலும் இந்திரனிடமிருந்து தேவலோகத்தையும் கைப்பற்றினான்.