Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 244)

Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்

ஹிரண்யாக்ஷே போத்ரி ப்ரவரவபுஷா தேவ பவதா ஹதே சோக க்ரோத க்லபித த்ருதி: ஏதஸ்ய: ஸஹஜ: ஹிரண்ய ப்ராரம்ப: கசிபுரமராராதி ஸதஸி ப்ரதிஜ்ஞாமாதேநே தவ கில வதார்த்தம் மதுரிபோ ஹிரண்யாக்ஷே போத்ரி ப்ரவர வபுஷா தேவ பவதா ஹதே சோக க்ரோத க்லபித த்ருதி: ஏதஸ்ய: ஸஹஜ: ஹிரண்ய ப்ராரம்ப: கசிபு: அமர ஆராதி ஸதஸி ப்ரதிஜ்ஞாம் ஆதேநே தவ கில வதார்த்தம் மதுரிபோ हिरण्याक्षे पोत्रीप्रवरवपुषा देव भवता हते शोकक्रोधग्लपितघृतिरेतस्य सहजः । हिरण्यप्रारम्भः कशिपुरमररातिसदसि प्रतिज्ञामातेने तव किल वधार्थं मधुरिपो

மது என்ற அரக்கனை அழித்தவனே! குருவாயூரப்பா! நீ பெரிய பன்றியாக அவதாரம் எடுத்தபோது உன்னால் ஹிரண்யாக்ஷன் கொல்லப்பட்டான். அப்போது கவலை மற்றும் கோபம் ஆகியவற்றை அடைந்து, அத்துடன் தைரியத்தையும் இழந்தவனும், ஹிரண்யாக்ஷனின் சகோதரனும், “ஹிரண்ய” என்ற பதத்தை முதலில் உடையவனும் ஆகிய கசிபு என்பவன், உன்னைக் கொல்வதாக தேவர்களின் பகைவர்களான அஸுரர்கள் நிரம்பிய சபையில் சபதம் செய்தான் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதத்தின் ஏழாம் ஸ்கந்தம், அத்யாயம் 2 முதல் 10 (ச்லோகம் 50 முடிய) வரை இந்த தசகம் மற்றும் அடுத்த தசகம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.