Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 243)

Dasaka 23 - சித்ரகேது சரிதம்

த்வத் ஸேவநேந திதிரிந்த்ர வதோத்யதாபி தாந் ப்ரத்யுதேந்த்ர ஸுஹ்ருதோ மருத: அபிலேபே துஷ்டாசயேபி சுபதைவ பவந்நிஷேவா தத்தாத்ருசஸ்த்வம் மாம் பவநாலயேச த்வத் ஸேவநேந திதி: இந்த்ர வதோத்யதாபி தாந் ப்ரத்யுத இந்த்ர ஸுஹ்ருதோ மருத: அபிலேபே துஷ்டாசயே அபி சுபதைவ பவந்நிஷேவா தத்தாத்ருச: த்வம் மாம் பவநாலயேச त्वत्सेवनेन दितिरिन्द्रवधोद्यताऽपि तान्प्रत्युतेन्द्रसुहृदो मरुतोऽभिलेभे । दुष्टाशयेऽपि शुभदैव भवन्निषेवा तत्तादृशस्त्वमव मां पवनालयेश

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்திரனைக் கொல்வதற்காக ஒரு மகனைப் பெற திதி (கச்ய ப்ரஜாதிபதியின் மனைவி) முடிவு செய்தாள். ஆனால் உன்னை அவள் வணங்கியதால் அந்தக் குழந்தை மருந்துகளாக மாறின. ஆக தீய எண்ணங்கள் மனதில் இருந்தாலும் உன்னை வணங்கினால் அவை மங்களகரமாக மாறி விடுகின்றன. இத்தனை பெருமை உடைய நீ என்னைக் காப்பாயாக!

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 8 முதல் 10 முடிய இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.***