Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 242)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
நிஸ்ஸம்ப்ரமஸ்த்வயமயாசித சாப மோக்ஷோ வ்ருத்தாஸுரத்வமுபகம்ய ஸுரேந்த்ரயோதீ பக்த்யா ஆத்ம தத்வ கதநை: ஸமரே விசித்ரம் சத்ரோபி ப்ரமமுபாஸ்ய கத: பதம் தே நிஸ்ஸம்ப்ரம: து அயம் அயாசித சாப மோக்ஷ: வ்ருத்தாஸுரத்வம் உபகம்ய ஸுரேந்த்ரயோதீ பக்த்யா ஆத்ம தத்வ கதநை: ஸமரே விசித்ரம் சத்ரோ: அபி ப்ரமம் உபாஸ்ய கத: பதம் தே निस्सम्भ्रमस्त्वयमयाचितशापमोक्षो वृत्रासुरत्वमुपगम्य सुरेन्द्रयोधी । भक्त्यात्मतत्त्वकथनैस्समरे विचित्रं शत्रोरपि भ्रममपास्य गतः पदं ते
குருவாயூரப்பா! இதனால் சித்ரகேது சிறிதும் மனம் தளரவில்லை. அவன் பார்வதியிடம் சாபவிமோசனமும் வேண்டி நிற்கவில்லை. வ்ருத்ரன் என்ற அரக்கனாகப் பிறந்த அவன், இந்திரனுடன் யுத்தம் புரிந்தான். (யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது) தனது பக்தியாலும் ஆத்ம தத்துவ உபதேசத்தாலும் அவன் இந்திரனின் அஜ்ஞானத்தை நீக்கினான். இறுதியாக உனது இடமான வைகுண்டத்தைப் பெற்றான். (இவை அனைத்தையும் ஆச்சர்யம் என்கிறார்).
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 17 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.