Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 241)

Dasaka 23 - சித்ரகேது சரிதம்

அத்யந்த ஸங்க விலயாய பவத் ப்ரணுந்நோ நூநம் ஸ ரூப்ய கிரிமாப்ய மஹத் ஸமாஜே நிச்சங்கமங்க க்ருத வல்லபமங்கஜாரிம் தம் சங்கரம் பரிஹஸந்நுமயா அபிசேபே அத்யந்த ஸங்க விலயாய பவத் ப்ரணுந்ந: நூநம் ஸ ரூப்ய கிரிம் ஆப்ய மஹத் ஸமாஜே நிச்சங்கம் அங்க க்ருத வல்லபம் அங்கஜாரிம் தம் சங்கரம் பரிஹஸன் உமயா அபிசேபே अत्यन्तसङ्गविलयाय भवत्प्रणुन्नो नूनं स रूप्यगिरिमाप्य महत्समाजे । निश्शङ्कमङ्ककृतवल्लभमङ्गजारिम् तं शङ्करं परिहसन्नुमयाऽभिशेपे

குருவாயூரப்பா! ஒரு முறை சித்ரகேது வெள்ளியாக உள்ள கைலாய மலைக்குச் சென்றான். அங்கு முனிவர்கள் சூழ்ந்துள்ள சபையில், சிறிதும் தயக்கம் இல்லாமல் தனது மடியில் பார்வதியை அமர்த்தியிருந்தவரும், மன்மதனை எரித்தவரும் ஆகிய சிவனைப் பரிகாசம் செய்தான். இதனால் அவன் பார்வதியால் சபிக்கப்பட்டான். ( பார்வதி அவனை அரக்கனாகப் பிறப்பாய் என்று சபித்தாள். அவனும் வ்ருத்ரன் என்ற அரக்கனாகப் பிறந்தான்). இப்படி நிகழ்ந்தும், சித்ரகேதுவிற்கு உலகப்பற்று நீங்கவேண்டும் என்று நீ எண்ணியதால் ஆகும்.

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 17 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.