Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 240)

Dasaka 23 - சித்ரகேது சரிதம்

த்வத் பக்த மௌலிரத ஸோபி ச லக்ஷலக்ஷம் வர்ஷாணி ஹர்ஷுலமநா: புவநேஷு காமம் ஸங்காபயன் குணகணம் தவ ஸுந்தரீபி: ஸங்காதிரேக ரஹிதோ லலிதம் சசார த்வத் பக்த மௌலிரத ஸோபி ச லக்ஷலக்ஷம் வர்ஷாணி ஹர்ஷுலமனா: புவனேஷு காமம் ஸங்காபயன் குணகணம் தவ ஸுந்தரீபி: ஸங்காதிரேக ரஹித: லலிதம் சசார त्वद्भक्तमौलिरथ सोऽपि च लक्षलक्षं वर्षाणि हर्षुलमना भुवनेषु कामम् । संगापयन् गुणगणं तव सुन्दरीभिः सङ्गातिरेकरहितो ललितं चचार

குருவாயூரப்பா! உன்னுடைய பக்தர்களில் உயர்ந்தவனான சித்ரகேது உனது தரிசனத்தாலும் உபதேசத்தாலும் நிறைந்த மனம் அடைந்தான். உனது திருக்கல்யாண குணங்களை வித்யாதர பெண்கள் மூலம் பாடல்களாகப் பாடச் செய்தான். மேலும் இன்ப துன்பங்களில் பற்றில்லாமல் இந்த உலகில் பல லக்ஷம் ஆண்டுகள் உலவி வந்தான்.

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 17 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.