Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 239)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
தஸ்மை ம்ருணால தவலேந ஸஹஸ்ர சீர்ஷ்ணா ரூபேண பத்தநுதி ஸித்தகணாவ்ருதேந ப்ராதுர்பவந்நசிரதோ நுதுபி: ப்ரஸந்நோ தத்வா ஆத்ம தத்வமநுக்ருஹ்ய திரோததாத தஸ்மை ம்ருணால தவலேந ஸஹஸ்ர சீர்ஷ்ணா ரூபேண பத்த நுதி ஸித்த: கணாவ்ருதேந ப்ராதுர்பவந் அசிரத நுதுபி: ப்ரஸந்ந: தத்வா ஆத்ம தத்வம் அநுக்ருஹ்ய திரோததாத तस्मै मृणाळधवळेन सहस्रशीर्ष्णा रूपेण बद्धनुतिसिद्धगणावृतेन । प्रादुर्भवन्नचिरतो नुतिभिः प्रसन्नो दत्त्वात्मतत्वमनुगृह्य तिरोदधाथ
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது நீ தாமரைத் தண்டு போன்று வெண்மையான ஆயிரம் தலைகளுடன் கூடியதும், புகழ்பாடும் சித்தர்கள் கூட்டம் சுற்றி நிற்பதுமான ஆதிசேஷன் உருவம் கொண்டாய். அத்தோற்றத்துடன் விரைவாக அரசன் முன்பு தோன்றினாய். அவனது துதிகளைக் கண்டு மகிழ்வுற்ற நீ அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தாய் அல்லவா?
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 16 இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.