Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 238)

Dasaka 23 - சித்ரகேது சரிதம்

ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரதத: அத லப்த்வா தோஷாய சேஷவபுஷோ நநு தே தபஸ்யந் வித்யாதராதிபதிதாம் ஸ ஹி ஸப்தராத்ரே லப்த்வாப்யகுண்டமதிரந்வபஜத் பவந்தம் ஸ்தோத்ரம் ச மந்த்ரம் அபி நாரதத: அத லப்த்வா தோஷாய சேஷவபுஷோ நநு தே தபஸ்யந் வித்யாதர அதிபதிதாம் ஸ ஹி ஸப்த ராத்ரே லப்த்வாபி அயகுண்டமதி: அந்வபஜத் பவந்தம் स्तोत्रं च मन्त्रमपि नारदतोऽथ लब्ध्वा तोषाय शेषवपुषो ननु ते तपस्यन् । विद्याधराधिपतितां स हि सप्तरात्रे लब्ध्वाप्यकुण्ठमतिरन्वभजद्भवन्तम्

குருவாயூரப்பா! அதன் பின்னர் சித்ரகேது நாரத முனிவரால் ஸ்தோத்ரத்தையும் மந்திரத்தையும் அறியப் பெற்றான். (நாரதர் உபதேசித்த ஸ்தோத்ரம் - ஓம் நமஸ்துப்யம் பகவதே வாஸுதேவாய தீமஹி ப்ரத்யும்னா யானிருத்தாய நம: ஸங்கர்ஷணாய ச - என்பதாகும். இதன் பொருள் - பகவானே! வாஸுதேவனான உனக்கு வணக்கங்கள்; ப்ரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன், ஆகியோராகத் தோன்றிய உனக்கு நமஸ்காரம்). (நாரதர் உபதேசித்த மந்திரம் - பகவதே மஹா புருஷாய மஹானுபவாவாய மஹா விபூதிபதயே ஸகல ஸாத்வத பரிவ்ருட நிகர கரகமல குட்மலோபலாலித சரணாரவிந்த யுகள பரம பரமேஷ்டின்னமஸ்தே). இதன் மூலம் சித்ரகேது, ஆதிசேஷ உருவமாக உள்ள உனது மகிழ்வுக்காக கடுமையான தவம் புரிந்தான். இதனால் ஏழே நாட்களில் (வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து) வித்யாகரர்களுக்குத் தலைவனாக உள்ள பதவி பெற்றான். அப்படி உயர்பதவி பெற்ற பின்னரும் தனது அறிவு மயங்காமல் உன்னை வணங்கி வந்தான்.

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 16, 18 முதல் 24 ஆகியவை இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.