Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 237)

Dasaka 23 - சித்ரகேது சரிதம்

தம் நாரதஸ்து ஸமமங்கிரஸா தயாலு: ஸம்ப்ராப்ய தாவதுபதர்ச்ய ஸுதஸ்ய ஜீவம் கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கிரா விமோஹம் த்யக்த்வா த்வதர்ச்சநவிதௌ ந்ருபதிம் ந்யயுங்க்த தம் நாரத: து ஸமம் அங்கிரஸா தயாலு: ஸம்ப்ராப்ய தாவத் உபதர்ச்ய ஸுதஸ்ய ஜீவம் கஸ்ய அஸ்மி புத்ர இதி தஸ்ய கிரா விமோஹம் த்யக்த்வா த்வதர்ச்சந விதௌ ந்ருபதிம் ந்யயுங்க்த तं नारदस्तु सममङ्गिरसा दयालुः सम्प्राप्य तावदुपदर्श्य सुतस्य जीवम् । कस्यास्मि पुत्र इति तस्य गिरा विमोहं त्यक्त्वा त्वदर्चनविधौ नृपतिं न्ययुङ्क्त

குருவாயூரப்பா! அந்த நேரத்தில் மிகவும் இளகிய மனம் படைத்த நாரதர், அங்கிரஸ முனிவரோடு அங்கு வந்தார். அந்த அரசனிடம் தனது யோக பலத்தால் இறந்த குழந்தையின் ஜீவாத்மாவைக் காண்பித்தார். பின்னர் அந்த ஜீவாத்மா, “நான் யாருடைய குழந்தை?” என்று கேட்கும்படி செய்தார். இதன் மூலம் அரசனின் அஜ்ஞானத்தை நீக்கி உனது ஆராதனையில் திருப்பினார்.

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 15 மற்றும் அத்யாயம் 16-இன் தொடக்கம் ஆகியவை இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.