Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 236)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
ப்ராக் சூரஸேநவிஷயே கில சித்ரகேது: புத்ராக்ரஹீ ந்ருபதிரங்கிரஸ: ப்ரபாவாத் லப்த்வைக புத்ரமத தத்ர ஹதே ஸபத்னீ ஸங்கைரமுஹ்யதவசஸ்தவ மாயயா அஸௌ ப்ராக் சூரஸேந விஷயே கில சித்ரகேது: புத்ராக்ரஹீ ந்ருபதி: அங்கிரஸ: ப்ரபாவாத் லப்த்வா ஏக புத்ரம் அத தத்ர ஹதே ஸபத்னீ ஸங்கை: அமுஹ்யத் அவச: தவ மாயயா அஸௌ प्राक्शूरसेनविषये किल चित्रकेतुः पुत्राग्रही नृपतिरङ्गिरसः प्रभावात् । लब्ध्वैकपुत्रमथ तत्र हते सपत्नी - संघैरमुह्यदवशस्तव माययासौ
குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் சூரஸேன நாட்டை சித்ரகேது என்பவன் ஆண்டு வந்தான். மிகவும் புகழ் பெற்ற அவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அவன் அங்கிரஸ முனிவரின் வலிமையால் ஒரு மகனைப் பெற்றான். ஆனால் அந்த மகன் அரசனின் மற்ற மனைவிகளால் (பொறாமை காரணமாக) கொல்லப்பட்டான். அதனால் உனது மாயையால் அந்த அரசன் மிகவும் துக்கத்தை அடைந்தான்.
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 14, இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.