Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 235)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
ஷஷ்ட்யா ததோ துஹித்ருபி: ஸ்ருஜத: குலௌகான் தௌஹித்ர ஸுநுரத தஸ்ய ஸ விச்வரூப: த்வத் ஸ்தோத்ர வர்மிதமஜாபயதிந்த்ரமாஜௌ தேவ த்வதீய மஹிமா கலு ஸர்வஜைத்ர: ஷஷ்ட்யா ததோ துஹித்ருபி: ஸ்ருஜத: குலௌகான் தௌஹித்ர ஸுநு: அத தஸ்ய ஸ விச்வரூப: த்வத் ஸ்தோத்ர வர்மிதம் அஜாபயந் இந்த்ரம் ஆஜௌ தேவ த்வதீய மஹிமா கலு ஸர்வஜைத்ர: षष्ट्या ततो दुहितृभिः सृजतः कुलौघान् दौहित्रसूनुरथ तस्य स विश्वरूपः । त्वत्स्तोत्रवर्मितमजापयदिन्द्रमाजौ देव त्वदीयमहिमा खलु सर्वजैत्रः
குருவாயூரப்பா! அதன் பின்னர் தக்ஷன் அறுபது பெண்களைப் பெற்று அவர்கள் மூலம் தனது வம்சத்தைப் பெருக்கினான். (அந்தப் பெண்கள் அதிதி, திதி போன்றவர்கள் ஆவர். இவர்கள் மூலம் மீன், பாம்பு, பல்லி, பசு, எருமை ஆகிய மிருகங்கள் உண்டானது). தக்ஷனின் பெண்வழிப்பேரன் விச்வரூபன் என்பவன் ஆவான். (இவன் திதி என்பவளின் மகனான த்வஷ்டாவிற்கும் ரசனை என்பவளுக்கும் பிறந்தவன்). இவன் இந்திரனுக்கு உனது மந்திரமான நாராயண கவசம் என்பதை உபதேசித்து இந்திரனை தேவாஸுர யுத்தத்தில் ஜெயிக்க வைத்தான். ஸ்ரீ அப்பனே! உனது வல்லமை அனைத்தையும் வெல்லும் அல்லவா? (நாராயண கவசம் என்பது நமது எதிரிகளிடம் இருந்து நம்மைக் காப்பதாகும்).
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை, இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளன.