Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 234)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
தஸ்யாத்மஜா: து அயுதமீச புந: ஸஹஸ்த்ரம் ஸ்ரீநாரதஸ்ய வசஸா தவ மார்க்கமாபு: நைகத்ர வாஸம்ருஷயே ஸ முமோச சாபம் பகதோத்தமஸ்த்வ்ருஷி: அநுக்ரஹமேவ மேநே தஸ்ய ஆத்மஜா: து அயுதம் ஈச புந: ஸஹஸ்த்ரம் ஸ்ரீநாரதஸ்ய வசஸா தவ மார்க்கம் ஆபு: நைகத்ர வாஸம் ருஷயே ஸ முமோச சாபம் பக்த உத்தம: து ருஷி: அநுக்ரஹம் ஏவ மேநே तस्यात्मजास्त्वयुतमीश पुनस्सहस्रं श्रीनारदस्य वचसा तव मार्गमापुः । नैकत्र वासमृषये स मुमोच शापं भक्तोत्तमस्त्वृषिरनुग्नहमेव मेने
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தக்ஷனுக்கு முதலில் பத்தாயிரம் புதல்வர்களும் பின்னர் ஆயிரம் புதல்வர்களும் தோன்றினர். (இந்தப் பதினாயிரம் பேரும் ஹர்யச்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களை ஸ்ருஷ்டியில் ஈடுபடுமாறு தக்ஷன் பணித்தான். அவர்களும் அதற்காக குருவாயூரில் உள்ள நாராயணசரஸ் குளத்தின் அருகே வந்தனர். குளத்தில் மூழ்கி எழுந்தவுடன் அவர்கள் எண்ணம் மாறிவிட்டது. அவர்களுக்கு மோக்ஷ உபாயம் எது என்று ஆராயும் மனம் ஏற்பட்டது). அப்போது அங்கு வந்த நாரத முனிவரின் உபதேசம் கேட்டு அவர்கள் மோட்ச வழியை அடைந்தனர். இதனைக் கேள்விப்பட்ட தக்ஷன் கோபம் கொண்டு நாரதரை நோக்கி, உனக்கு நிலையான இடம் இல்லாமல் போகும் என்று சபித்தான். பக்தர்களில் உத்தமரான நாரதரும் அந்தச் சாபத்தை நன்மை என்றே கொண்டார்.
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 5, இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.