Sriman Narayaneeyam - Dasaka 23 - சித்ரகேது சரிதம் (ச்லோகம் 233)
Dasaka 23 - சித்ரகேது சரிதம்
ப்ராசேதஸஸ்து பகவந்நபரோ ஹி தக்ஷ: த்வத் ஸேவநம் வ்யதித ஸர்க விவ்ருத்திகாம: ஆவிர்பபூவித ததா லஸதஷ்டபாஹு: தஸ்மை வரம் ததித தாம் ச வதூமஸிக்னீம் ப்ராசேதஸ: து பகவந் அபர: ஹி தக்ஷ: த்வத் ஸேவநம் வ்யதித ஸர்க விவ்ருத்தி காம: ஆவிர்பபூவித ததா லஸத் அஷ்ட பாஹு: தஸ்மை வரம் ததித தாம் ச வதூம் அஸிக்னீம் प्राचेतस्तु भगवन्नपरो हि दक्ष - स्त्वत्सेवनं व्यधित सर्गविवृद्धिकामः । आविर्बभूविथ तदा लसदष्टबाहु - स्तस्मै वरं ददिथ तां च वधूमसिक्नीम्
குருவாயூரப்பா! பகவானே! ப்ரசேதஸர்களின் மகனான தக்ஷன் அல்லாமல் வேறு ஒரு தக்ஷன் என்பவன் தனது குலத்தை வ்ருத்தியடைய வைப்பதற்காக உன்னைக் குறித்து ஹம்ஸகுஹ்யம் என்ற மந்திரத்தால் ஆராதனை செய்தான். இதனால் மகிழ்வுற்ற நீ அவன் முன்பாக எட்டுக் கைகளுடன் தோன்றினாய். அவனுக்கு வரம் அளிக்கும் வகையாக அஸிக்னீ என்ற பெண்ணை மனைவியாக அளித்தாய் அல்லவா? (விளக்கம் காண்க).
ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 4, இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.