Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 232)
Dasaka 22 - அஜாமிளன் சரிதம்
ஸ்வகிங்கராவேதன சங்கிதோ யம: த்வதங்க்ரி பக்தேஷு ந கம்யதாமிதி ஸ்வகீய ப்ருத்யாநசிசிக்ஷதுச்சகை: ஸ தேவ வாதாலயநாத பாஹி மாம் ஸ்வ கிங்கர அவேதன சங்கித: யம: த்வத் அங்க்ரி பக்தேஷு ந கம்யதாம் இதி ஸ்வகீய ப்ருத்யான் அசிசிக்ஷத் உச்சகை: ஸ தேவ வாதாலயநாத பாஹி மாம் स्वकिङ्गरावेदनशङ्कितो यमस्त्वदङ्घ्रिभक्तेषु न गम्यतामिति । स्वकीयभृत्यानशिशिक्षदुच्चकैः स देव वातालयनाथ पाहि माम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தனது தூதர்கள், தன்னிடம் நடந்தவற்றைக் கூறக் கேட்ட யமன் அச்சம் கொண்டான். உனது திருவடிகளைப் பற்றியவரையும், திருநாம ஸங்கீர்த்தனம் செய்பவர்களையும் எப்போதும் அணுகக்கூடாது என்று தனது தூதர்களுக்கு உத்தரவிட்டான். இத்தகைய பெருமையுடைய நீ என்னைக் காக்க வேண்டும்.***